8268 கல்வித் தத்துவம்.

ப.சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park).

xxiv, 204 பக்கம், விலை: ரூபா 560., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1857-97-4.

கல்வியியலை தமிழ்மொழிமூலம் கற்பித்த முன்னோடிகளுள் பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் (17.7.1926-12.11.1987)  முக்கியமானவர். தமிழ்மொழிமூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும் என்பதை நிரூபித்தவர். இந்நூல் கல்வியின் வரையறை, கல்வியும் மரபும் மாற்றமும், பிளேட்டோ கண்ட கல்வித் தத்துவம், ரூசோ போற்றிய கல்விநெறி, கார்ல் மார்க்ஸ் கொண்ட கல்விச் சிந்தனை, ஜோன் டூயி வழங்கிய கல்விமுறை,  காந்தியடிகள் கற்பித்த கல்வித்திட்டம், தாகூர் தந்த கல்விக் கருத்து, ஈழத்துச்சிந்தனைக் கதிர்கள், கல்வியும் அரசியலும், கல்வியும் பொருளாதார விருத்தியும், சமூகக்கல்வி, சமூகக் கல்விசார் சாதனங்கள், கலைத்திட்டம்: வரைவிலக்கணம், கலைத்திட்டம் அமைப்பு, இலங்கையின் நவீன கல்வித்திட்டம்,  பல்கலைக்கழகக் கல்வித் தத்துவம், நல்லாசிரியரின் இலக்கணம் அதன் தோற்றமும் வளர்ச்சியும், கல்வியும் உலக நெறியும் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர்  மட்டக்களப்பின் மண்டூரில், ஆசிரியராகப் பணியாற்றிய  வ.பத்தக்குட்டி ஆசிரியரின் இளைய புதல்வராவார்.  திருக்கோணமலை இந்துக்கல்லூரி,  மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். 1948இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம்பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில்; பணியாற்றியவர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை 1980இல் நிறுவப்பட்டபோது அதன் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்நூல் யாழ். கூட்டுறவு தமிழ்நூல் பதிப்பு விற்பனைக் கழகத்தினால் மார்ச் 1975இல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்