செ.கந்த சத்தியதாசன். புத்தூர்: சைவப்புலவர் செ.கந்த சத்தியதாசன், முருகன் திடல், புத்தூர் கிழக்கு, 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R.. ஆப்செட்).
xxiv, 192 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 17.5×12 சமீ.
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட சைவப்புலவர் செ.கந்த சத்தியதாசன், யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியின் பழைய மாணவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விஞ்ஞானக் கல்வியைப் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்துறையில் பயின்று பட்டதாரியாகி சைவசித்தாந்தத்தில் முதுகலைமாணிப் பட்டதாரியானவர். வலிகாமம் கல்வி வலயத்தில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியவர். இந்நூலில் நோக்கமும் வரையறையும், யாழ்ப்பாணச் சைவக்கல்வி வரலாறு, அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் சைவக்கல்விப் பணி, அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் எதிர்காலத்திட்டங்கள், நிறைவுரை ஆகிய ஐந்து இயல்களில் ஈழத்தின் சைவக்கல்விப் பாரம்பரியம் பற்றியும் சைவப்புலவர்களின் பங்களிப்பு பற்றியும் தனது ஆய்வை மேற்கொண்டுள்ளார்.