8278 திசைகாட்டி: கல்வியியல்சார் கட்டுரைகள்.

சு.மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). அல்வாய்: சுப்பிரமணியம் புவனேஸ்வரி ஞாபகார்த்த வெளியீடு, மதுரா, அல்வாய்  வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அல்வாய்: மதுரன் கிறாபிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டெர்ஸ், அல்வாய் வடமேற்கு).

(8), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அல்வாய், மதுரன் கிறாபிக்ஸ் நிறுவன உரிமையாளர்  31.5.2008இல் மரணமடைந்த தனது தாயார் சுப்பிரமணியம் புவனேஸ்வரியின்  நினைவாக இந்த நினைவு மலரைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூல்  கல்வியியல்துறை சார்ந்தவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.  இதில் ஆரம்ப பிள்ளைப் பருவமும் மொழித்திறன் விருத்தியும்: பெற்றோருக்கான சில பயனுள்ள குறிப்புகள் (கலாநிதி த.கலாமணி, சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), ஆரம்பக் கல்வியின் போக்குகளும் எதிர்கால அறைகூவல்களும் (கலாநிதி திருமதி ஜெ.இராசநாயகம், சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியும் அதன் விளைவுகளும் (கலாநிதி மா.கருணாநிதி, சமூக விஞ்ஞானத்துறை, கல்விப்பீடம், கொழும்புப்; பல்கலைக்கழகம்), கட்டாயக் கல்விக்கான திசைமுகப் படுத்தல்களை நிறுவுதலும் எண்ணக்கரு விரிவாக்கமும் (பா.தனபாலன், உப பீடாதிபதி, கல்விப்பீடம், யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி), ஆங்கில மொழியின் முக்கியத்துவமும் அதன் இன்றைய நிலையும் (த.மோகன், விரிவுரையாளர், யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்