ச.த.பூ. பத்மசீலன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: ஓமந்தை மத்திய கல்லூரி, ஓமந்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park)
(42), 308 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25ஒ18 சமீ.
நூற்றாண்டு விழாவை 20.11.2011 இல் கொண்டாடும் வவுனியா-ஓமந்தை மத்திய கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வாழ்த்துச் செய்திகளுடன், பாடசாலை வரலாறு பற்றிய கட்டுரைகளும், அடங்காப்பற்று வன்னிமைகள் (சி.பத்மநாதன்), வன்னிநாடும் திராவிடரும் (சி.க.சிற்றம்பலம்), வன்னியில் குடியேற்றம் (ச.சத்தியசீலன்), வன்னிவள நாட்டுப்பாடல்கள் (சு.வித்தியானந்தன்), வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும் (இரா.சிவச்சந்திரன்), வரலாறுகளும் அடையாளங்களும் (தெ.மதுசூதனன்), வன்னிப்பிரதேச பொது நிர்வாகமுறைமை: ஒரு வரலாற்று நோக்கு (அ.விமலேந்திரன்), வன்னிப்பிரதேசமும் நாட்டார் பண்பாட்டியலும் (க.கைலாசபதி), பண்பாட்டின் ஊற்றுக்கள் (கா.சிவத்தம்பி), வன்னிப்பிரதேச சமூக ஒழுங்கமைப்பும் நாட்டார் வழக்கியலும் (நா.சுப்பிரமணியம்), இலங்கையில் கண்ணகி வழிபாடு (இ.பாலசுந்தரம்), வடபிரதேசத்திற்கான புதியதோர் நிர்வாக மையம் மாங்குளம் (பொ.பாலசந்தரம்பிள்ளை), வவுனியா மாவட்டமும் கல்வி வளர்ச்சியும் (அகளங்கன்), வன்னி தமிழகத்தின் இந்துப் பாரம்பரியம் (N.K.S.திருச்செல்வம்), மீண்டெழும் கல்விக்கு வலுவூட்டுதல் (சபா ஜெயராசா), ஊக்கமுடைய மாணவர்களை உருவாக்குதல் (சோ.சந்திரசேகரம்), கற்றற் பாங்குகளும் கல்விசார் பயன்பாடுகளும் (க.சின்னத்தம்பி), வடமாகாண ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் வினையாற்றல் (மா.கருணாநிதி), மட்டக்களப்பு தாய்மார் பள்ளிப் பரீட்சார்த்தத்தை வன்னி மாவட்டத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கு பிரயோகித்தல்(மா.செல்வராஜா), இலங்கை வட்டார வழக்குச் சொற்கள் (சு.சுசீந்திரராஜா), வன்னிப் பிரதேச நாவல்கள் புலப்படுத்தும் இன உறவுகள் (ம.இரகுநாதன்), ஓமந்தையும் நானும் (எஸ்.சிவலிங்கராஜா), போர்ச்சூழலில் மரணசாதனங்கள் அழிந்துபோனால் ? (க.வி.விக்னேஸ்வரன்), தமிழ்ச் சமூகமும் பெண்களும் (அ.ஸ்ரீகாந்தலட்சுமி), வன்னி தந்த மாவீரன் (செ.து.தெட்சணாமூர்த்தி), பண்டிதர் வ.சு.இராஜ ஐயனார் (முருகேசு கௌரிகாந்தன்), அறிவுதேடல் அனுபவமாக்கல்: சிறுவர் கல்விக்கான அணுகுமுறை (சு.பரமானந்தம்), பண்டைய கல்வி மரபும் நவீன கல்விச் சிந்தனைகளும் (கு.சிதம்பரநாதன்), உயர்வகுப்பின் பெறுபேற்று வியாக்கியானம் (கோ.வாகீசன்), தரம் 5 புலமைப்பரீட்சை (தி.மனோகரராஜா), உயர் குருதி அமுக்கம் (ஜெயாளினி), நீரிழிவு நோய் (அ.தணிகாபரன்), பழக்க வழக்கங்கள் பண்பாட்டின் நிலைக்களங்கள் (வே.சிவலோகவதி), மாணவர்களை கற்றலின்பால் ஊக்கவிப்பதில் ஆசிரியரின் பங்கு (த.வசந்தகலா), மனவளக் கலை (கோ.கலாவதி), Blooming thoughts on the Grade six English Medium Seminar held at Puliankulam (S.Sivapalan), அன்றாட வாழ்வில் விளங்கியிருக்கவேண்டிய விஞ்ஞான சிந்தனைத் துளிகள் (மு.அரசரெத்தினம்), சர்வதேச பாடசாலைகள் இலவச கல்விக்குச் சவாலாகின்றனவா?(சி.துஷ்யந்தன்), எமது கல்லூரியின் சாரணர்களின் வளர்ச்சிப்பதிவுகள் (இ.சந்திரமோகன்), ஆரம்ப பிரிவு மாணவர்கள் கற்றலில் பின்நிற்பதற்கான காரணங்கள் (க.ஜெயவாணி), பிள்ளையின் சமூகமயமாக்கற் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் (ச.கிரிஜா), கற்றல் மேம்பாட்டில் வாசிப்பு (கி.சிவானந்தன்), இடைவிலகும் மாணவர் கல்விக்குத் தடையான காரணிகள் (க.இராசலிங்கம்), ஆரம்பக்கல்வி ஆசிரியரின் உயர்ந்த பண்புகள் (ஜெயதேவி சுபாஸ்கரன்), அறிவுசார் பொருளாதாரம் (ஜெ.சுதர்ஜினி) ஆகிய கட்டுரைகளுடன் பாடசாலை மாணவர்களதும், பழைய மாணவர்களினதும் பொதுவான கட்டுரைகளும் இம்மலரில் இடம்பெறுகின்றன.