8289 மட்டக்களப்பு நாட்டாரியல்.

வ.சிவசுப்பிரமணியம். மட்டக்களப்பு: வ.சிவசுப்பிரமணியம், 65, நல்லையா வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: வக்மி பதிப்பகம், வக்மீ ட்ரேடிங் கொம்பனி லிமிட்டெட், 258/3, டாம் வீதி).

xvii, 244 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.

இளமை நினைவுகள், மட்டக்களப்பெனும் வளநாடு, புவியியல் குறிப்புகள், வரலாற்றுக் குறிப்புகள், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு என்பன தரும் செய்தி, மட்டக்களப்பு நாட்டார் வாழ்க்கை, சமூகம், தொழில், சமயம், கல்வி, தொல்காப்பியத்தில் வாய்மொழி இலக்கியத்தின் சுவடுகள், தமிழரின் வாய்மொழி இலக்கியத்தின் ஆதி இசை அகவல், பாணர் கலைமரபு, தொல்காப்பியம் குறிப்பிடும் நாட்டார் பாடல்களும் மட்டக்களப்பு நாட்டார் பாடல்களில் அதன் தொடர்ச்சியும், பிசி, முதுமொழி, குறிப்புமொழி, பண்ணத்தி, மட்டக்களப்பு நாட்டாரின் இசைப்பாடல்கள், கவிகள், காவியங்கள், அம்மானைப் பாடல்கள்-கண்ணன் இலக்கியம், வசந்தன் பாடல்கள், குழந்தைப் பாடல்களும் சிறுவர் விளையாட்டுப் பாடல்களும், பண்டைத் தமிழரின் கூத்துக்கள், தொல்காப்பியர் கூறும் கூத்துக்கள், சங்க இலக்கியங்கள் கூறும் கூத்துக்கள், சிலப்பதிகாரம் கூறும் ஆடல் பாடல் சம்பந்தமான செய்திகள் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்ற ஆய்வுநூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  217193).

ஏனைய பதிவுகள்