செல்லையா நவநீதகுமார். கொழும்பு 6: சைவநீதி வெளியீட்டுக் குழு, இல.4, சோமகிரி பிளேஸ், 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, வுல்வெண்டால் வீதி).
iv, 74 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 18.5×13 சமீ.
இலங்கையில் வெளிவரும் சைவநீதி என்ற சமயச் சஞ்சிகையின் ஆசிரியரான செ.நவநீதகுமார் எழுதியுள்ள இந்நூல், சைவ முறைப்படி மரணக்கிரியைகளை செய்வதெப்படி என்று விளக்குகின்றது. ஏழு இயல்களைக்கொண்ட இந்நூல் சைவ சமய அந்திமக் கிரியைகள், மாளயம், பத மந்திரம், திருப்பொற்சுண்ணம், அபரக் கிரியைகளின்போது ஓதத் தக்க திருமுறைப்பாடல்கள், ஆளெசம் விளக்கம், சங்கற்ப வாக்கியம் ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218553).