வீ.பரந்தாமன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
liii, 123 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
ஈழத்துப் பூதன் தேவனார் வழிவந்த ஈழத்தமிழ் அறிஞர் வீ.பரந்தாமன் அவர்கள் தொகுத்துள்ள இவ்வகராதி, முன்னர் ஞானப்பிரகாசரோ, பாவாணரோ பிறரோ கண்டுரைக்காத புதிய பல சொற்களையும் உள்ளடக்கியதாக வெளிவருகின்றது. கேளிக்கை, சங்கிலி, சஞ்சலம், சரம், சாட்சி, சாதுரியம், தீரம், துவக்கு, தொப்பி, நிவர்த்தி, பத்தியம், பரவசம், பிரியம், மயானம், முகாந்தரம், முசுப்பாத்தி, வயது, வீதி போன்ற சொற்களை இந்நூலுக்கு அறிமுகவுரை வழங்கிய பேராசிரியர் கு.அரசெந்திரன் அத்தகைய புதிய வேரடிச் சொற்களாக இனம் காட்டுகின்றார்.