த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(4), 168 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-1038-04-5.
இந்நூலில் கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், பழமொழிகள், உவமைச் சொற்றொடர்கள், உரையாடல்கள், கதைகள், கடிதங்கள், விளம்பரங்கள், அணிகள், உவமைகள் என்பன அடங்கியுள்ளன. பாடத்திட்டத்தில் உள்ள சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழித்திறனையும் விருத்திசெய்யும் நோக்குடன் இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார். இதே ISBN இலக்கம் கட்டுரை மலர்த்தொகுதியின் வேறு தரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.