8351 ஆழிப் பேரலை: அறிந்திருக்கவேண்டிய சில தகவல்கள்.

மருதமுனை மஜீத் (இயற்பெயர்: A.H.M.மஜீத்). மருதமுனை: மருதமுனை வாசகர் வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2008. (மருதமுனை: அப்னா ஓப்செற் பிறின்டிங்).

xiii, 145 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1937-00-03.

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரான மருதமுனை மஜீத் விஞ்ஞானமும் இலக்கியமும் கலந்த சுவையானதொரு சமுத்திரவியல் நூலாக இதனை எமக்களித்துள்ளார். பசுபிக் கரையோரத்தில் ஜப்பான் தீவுகளில் அடிக்கடி ஏற்படும் சுனாமி எம்மைத் தாக்கிய 2004 மார்கழி இலங்கையரின் வாழ்வில் மறக்கமுடியாதது. இந்நூல் இதற்கு முன்னர் எமது கரையோரங்களைத் தாக்கிய பல சுனாமிகள் பற்றிய செய்திகளைத் தருகின்றது. சுனாமியின் பின்விளைவான சமூக, பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. பூகம்பம், கடலடித் தட்டுக்கள், கடலடிப் பூகம்பம், ஆழிப்பேரலை எவ்வாறு ஏற்படுகின்றது? சுனாமி இயற்கையில் செய்துள்ள மாற்றங்கள், புவி நடுக்கமும் அலைகளும், சாதாரண நீர்நிலைகளும் சுனாமியும், ஆழிப் பேரலை வெளிப்படுத்திய சக்தியும் தாக்கமும், ரிச்டர் கணியம், சுனாமியும் பொருளாதாரமும், ஆழிப்பேரலைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகிய தலைப்புகளில் முதற்பாகம் விரிகின்றது.  இரண்டாம் பகுதியில் ஆழிப்பேரலை பற்றி இஸ்லாம் மற்றும் விவிலியம் கூறும் தகவல்கள், கடலன்னையுடன் ஒரு சம்வாதம், சுனாமி அனர்த்தம் போன்ற தலைப்புகளிலான கவிதைகள்,  சுனாமியின் அற்புதங்கள், சுனாமி கலக்கிய கலாச்சாரம், சுனாமி கற்றுத்தந்த பாடம்,  சுனாமியும் உளவியல் பிரச்சினைகளும் போன்ற தலைப்புகளிலான கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. 

ஏனைய பதிவுகள்

Daten je Jugendliche im KulturPass: kulturpass de

Content WhatsApp: Gewissheit steht stärker inoffizieller mitarbeiter Brennpunkt: ihr Kommentar ist hier Glanzleistung des Unterhaltsvorschusses Millionen Eur inoffizieller mitarbeiter 00: Unser man sagt, sie seien