8354 வலுக் குன்றுதலும் அதன் சவால்களும்: அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுப் பேருரை 6.

என்.சிவராஜா. யாழ்ப்பாணம்: நிறுவுநர் நினைவுநாள் நிகழ்வுக் குழு, வாழ்வகம், சபாபதி வீதி, மருதனார் மடம், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: சாயி பிரிண்டர்ஸ், கோண்டாவில்).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

புரட்டாதி மாதம் 11ம் திகதி 2012ம் ஆண்டு சபாபதி வீதி, மருதனாமடத்தில்  அமைந்துள்ள வாழ்வகத்தில்  ‘வலுக்குன்றுதலும் அதன் சவால்களும்’  (Disability  and its challenges) என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் ஆறாவது ஆண்டு ஞாபகார்த்த விரிவுரை. விரிவுரை நிகழ்த்திய வைத்திய கலாநிதி நடராஜா சிவராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளராக 23 ஆண்டுகள் பணியாற்றியவர். தனது 47 ஆண்டு கால மருத்துவத்துறை வாழ்க்கையில் பல்வேறு சமூக சுகாதார நிறுவனங்களுடனும் தொடர்புகொண்டிருந்தவர்.  ஈழத்தின் போர்க்காலம் முழுவதும் வடபகுதியில் சுகாதார  மருத்துவசேவையை  மக்கள் சேவையாக ஆற்றி மனநிறைவு கண்டவர். கடந்த பத்தாண்டுக் காலமாக உலக சுகாதார நிறவனத்தின் வடமாநில இணைப்பாளராகப்  பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்