8390 ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்.

அம்மன்கிளி முருகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

xii, 180 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-099-4.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முன்னுரைகளினூடாக அறியப்படும் அரங்க மரபும் ஆளுமைகளும் பற்றிய தொகுப்பே இந்நூலாகும். ஈழத்து அரங்கத்துடனும் அரங்க வரலாற்றுடனும் இணைந்துகொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. இன்றைய இலங்கையில் நாடகத்தைப்பற்றிப் பேசுகிற எழுதுகிற அனைவரும் ஏதோ ஒரு வகையில் பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் ஆசிரிய-மாணவத் தொடர்பு அல்லது நட்புத் தொடர்பினை உடையவர்களே.  நீண்டகாலமாக நாடக அரங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் ஈழத்திலெழுந்த பெரும்பாலான நாடகம் பற்றிய நூல்களுக்கு இவர் முன்னுரை எழுதியுள்ளார்.  தொடர்ச்சியாக இவர் எழுதிய முன்னுரைகள்  ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சியையும் அதில் உழைத்தவர்களையும் பற்றிப் பேசுவனவாய் உள்ளன.  எனவே ஈழத்து அரங்க வரலாறு பற்றி அறிவதற்கு இவை மிகுந்த பயனளிப்பவை.  நாடகம் என்றால் என்ன எனத் தொடங்கி, கற்கை நெறியாக அரங்கு என்ற நூலுக்கான முன்னுரை வரை வெளிவந்த இருபது முன்னுரைகளையும் பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப் பணிகள், பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகப் பணிகள், மலையக அரங்கு பற்றிய ஒரு சிந்திப்பு ஆகிய கட்டுரைகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்ற நூலாசிரியர் கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில்  முதுநிலை விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

88 Luck Real cash Slot machine game

Articles Play’n Go Releases The newest Online slots Tomb Away from Silver Doorways Of Olympus Totally free Play Inside Demo Function Real cash Vs 100