8399 இலங்கை திரை இசையின் கதை.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்யாதீபம் பப்ளிகேஷன்ஸ், 90/9, புதிய செட்டித்தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 13: சண் பிரின்டெக்).

xiv, 182 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-96785-7-1.

இலங்கைத்தீவின் தமிழ்த் திரை இசையின் கதையைச் சொல்லும் இந்நூல் 30 அத்தியாயங்களில் விரிகின்றது. திரை இசையின் கதை என்ற அறிமுக இயலைத் தொடர்ந்து 29 தலையங்கங்களும் சமுதாயம், தோட்டக்காரி, குசுமலதா, கடமையின் எல்லை, டக்சி டிரைவர், நிர்மலா, மஞ்சள் குங்குமம், வெண்சங்கு, குத்துவிளக்கு, மீனவப் பெண், புதிய காற்று, கோமாளிகள், பொன்மணி, காத்திருப்பேன் உனக்காக, நான் உங்கள் தோழன், வாடைக்காற்று, தென்றலும் புயலும், தெய்வம் தந்த வீடு, ஏமாளிகள், அனுராகம், எங்களில் ஒருவன், மாமியார் வீடு, நெஞ்சுக்கு நீதி, இரத்தத்தின் இரத்தமே, அவள் ஒரு ஜீவநதி, பாதை மாறிய பருவங்கள், நாடு போற்ற வாழ்க, இளைய நிலா, சர்மிளாவின் இதய ராகம் ஆகிய ஈழத்துத் திரைப்படங்களின் தலைப்புகளின்கீழ் அவ்வத்திரைப் படங்களின் திரை இசை பற்றிய விரிவான பார்வையை இவை பதிவுசெய்கின்றன. இத்திரைப்படங்களின் பாடல்கள் பல இன்று பாதுகாக்கப்படாமல் இல்லாதொழிந்து போன நிலையில்  கடினமான தேடலின்பயனாக எழுத்துருவிலாவது  அவற்றின் வரலாற்றைப் பதிவுசெய்யும் இந்நூல் வரலாற்று முக்கியத்துவம் பெறும் முதன்மை ஆவணமாகின்றது.

ஏனைய பதிவுகள்

The new Online casinos Us

Posts Betrivers Online casino games What is actually Your Games? Is Online casinos Judge In the usa? Instantaneous Detachment Web based casinos Usa Whenever referring