த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
78 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1162-49-8.
இந்நூலில் சிறுவர்கள் பாடி ஆடிப் படித்து மகிழ்வதற்கென எழுதப்பெற்று பிரபல்யமான 25 பாடல்களும் சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆசிரியரின் மூன்று கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய கவிஞர்களது பாடல்கள் முதலில் இடம்பெறுகின்றன. தமிழில் சிறுவர் இலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் சிறுவர்கள் அறிந்துகொள்ள ஏற்றதாக முதலாவது கட்டுரை அமைகின்றது. இரண்டாவது கட்டுரை ஈழத்தில் சிறுவர் இலக்கியம் தோற்றம்பெற்றமையையும் அதன் வளர்ச்சிப் பாங்கையும் அதற்கு உரமிட்ட கவிஞர்களையும் நன்கு விபரிக்கின்றது. மூன்றாவது கட்டுரை – ஈழத்தவரும் தங்கத்தாத்தா எனச் சிறுவர்களால் அழைக்கப்பட்டவருமான நவாலியூர் க. சோமசுந்தரப் புலவரது கவிதைப் பணிகளைத் தமிழகத்துக் கவிமணி சி.தேசிக விநாயகம்பிள்ளையினது கவிதைப் பணிகளுடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்நூல் சிறுவர் பாடல்களினூடாகவும் கட்டுரைகளினூடாகவும் ஈழத்தின் சிறுவர் இலக்கிய வரலாற்றை பதிவுசெய்யும் சிறந்ததொரு ஆவணமாகின்றது.