8402 சிறுவர் இலக்கியம்.

சபா ஜெயராசா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை).

iv, 118 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-291-7.

சிறுவர் இலக்கியத்துடன் தொடர்பான கல்வியியல், உளவியல், சமூகவியல் போன்ற அனைத்துத் துறைகளின் பார்வைகளையும் உள்ளடக்கிய முழுமையான, ஆழ்ந்த நூலொன்றின் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. சிறுவர் இலக்கியம்- நோக்கும் எழுகோலங்களும், படி மலர்ச்சி கொள்ளல், தன்னிலை ஆக்கம், சமூகமயமாக்கல், சமூக நோக்கு, அறவொழுக்க விருத்தி, இலக்கியக் குறிக்கோள்கள், கற்பனை உலகம், இலக்கிய முகிழ்ப்பு, மொழி வினைப்பாடுகள், வாசிப்புத் துலங்கல்;, விளையாட்டுக்கள்,  நாடகம், பொம்மலாட்டம், உளப்பகுப்பு இயல், உளச் சமூக விருத்தி, பியாசே, வைக்கோட்சி, இரட்டைநிலை அசைவியம், சீர்மியம், நெகிழ் நடப்பியல், தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி, சிறுவர் இலக்கிய அருஞ்சொற்றொகுதி ஆகிய 23 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Merkur Roulette Online Spielen 2024

Content Wie Kann Ich Die Besten Merkur Online Casinos Für Deutsche Spieler Finden? – einzahlung per handyrechnung casino Top 10 Merkur Spiele Meine Meinung Zum