ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
iv, 30 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-3-5.
பத்து முதல் பதினான்கு வயதுக்கிடைப்பட்டவர்களை மனதிற்கொண்டு உருவாக்கப்பட்ட 30 சிறுவர் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தம்பிக்கொரு பாட்டு, எங்கள் நாடு, நாம் யார்? மொழி கற்போம், கூடி ஆடுவோம், எது வீரம், நீரியல், தாவரங்கள், நாக்கு, ஐம்புலன்கள் எனப் பல்வேறு தலைப்புகளிலும் இப்பாடல்கள் அறிவூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.