த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி, யாழ்ப்பாணம்).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 17.5×12 சமீ.
முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தை இளஞ் சிறுவர்களுக்கு உரிய காவியமாகப் பாடியிருக்கிறார் நூலாசிரியர். மண்ணக மாந்தர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு மன்னர்களுக்கு அறபோதனை செய்த நூல் சிலப்பதிகாரம். இது பாலர் நூல் வரிசையில் 11ஆவது நூலாக வெளிவந்துள்ளது.