நா.மகேசன். கொழும்பு 6: செ.தனபாலசிங்கன் நினைவு வெளியீடு, 59 மூர் வீதி, 1வது பதிப்பு, 1978. (நாவலப்பிட்டி: ஸ்ரீ அத்மஜோதி அச்சகம்).
70 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×14 சமீ.
ஒளவையார் அருளிய ஆத்திசூடிப் பாட்டுக்களில் தேர்ந்த 21 கவி வரிகளை வைத்து ஒவ்வொன்றினதும் பொருளை விளக்குபவையாக அமைந்த சிறுவர்களுக்கான 21 குட்டிக்கதைகள். உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கொழும்பில் உதவித் தொழில் ஆணையாளராகக் கடமையாற்றியவருமான அமரர் செ.தனபாலசிங்கனின் ஞாபகார்த்தமாக இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10917).