8442 நிலையற்ற குறிக்கோள்: சிறுவர் கதைகள்.

எம்.எச்.சுயானா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

viii,37 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-02-4.

இறக்கக் கண்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இந்நூலாசிரியர். முன்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் இவரது எட்டுச் சிறுவர் கதைகளின் தொகுப்பு இந்நூலாகும். ஒவ்வொன்றும் சிறுவர்களுக்கான படிப்பினையொன்றின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோணமலை மாவட்டத்தின் கிராமிய இயற்கையழகும் வரலாறும்  கதைகளில் ஆங்காங்கே பின்னப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14482 அரச கணக்கியல் தொழில்நுட்பவியலாளருக்கான கற்பித்தல் கைநூல்.

கணக்கியல் பயிற்சிப் பிரிவு. கொழும்பு: நிதி அமைச்சு-ஆசிய அபிவிருத்தி வங்கி, மனித வள அபிவிருத்தி, 2வது பதிப்பு, ஜுன் 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). (2), 121