சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தொண்டைமானாறு: சின்னத்தம்பி இராசமணி நினைவு வெளியீடு, இராசமணி இல்லம், அண்ணா சனசமூக நிலையம், கெருடாவில் தெற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்).
62 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
கி.விசாகரூபன் தொகுத்த ஈழத்துத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள் என்ற நூலிலும், கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் ஆகிய இரு நூல்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது கதைகள் இடம்பெற்றுள்ளன. ஈழத்து நாட்டுப்புறக் கதைகளாக வல்லிபுர ஆழ்வார், குதிரைக் காவல், வெண்ணெய் தின்ற குரங்குகள், பன்றித் தலைச்சி அம்மன், நகை வாங்கிய பேய், திருவம்பலம், கரிக்குருவியும் காக்காயும், வழிப்போக்கனின் தந்திரம், நாயும் அரசியும், கஷ்டம் தான் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. தமிழக நாட்டுப்புறக் கதைகளாக மேகங்களும் நதிகளும் உண்டான கதை, எறும்பு வாங்கிய வரம், பேன் பார்த்த பேய், அன்னதானப் பலன், ரெண்டு பெண்டாட்டிக் காரன், உள்ளதும் போச்சு, கிழவியின் தந்திரம், கொழுக்கட்டை என்றால் உசுரு, ஆண்டிகள் கட்டிய மடம், தக்காளித்தங்கை ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன.