ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை 1: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1/140, பிராட்வே, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1945. (சென்னை : செங்குந்த மித்திரன் அச்சகம்).
(6), 95 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
சிறுவர்கள், தமிழரின் வரலாற்றைக் கற்றறிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதப்பட்ட நூல் இது. தமிழ் இந்தியா என்ற இவரது விரிவான நூலின் சிறுவர்களுக்கான சுருக்கப்பதிப்பு இதுவாகும். ஆதிமக்கள் ஒரே வகையினர், அவர்களது சமயமும் ஒன்று, மொழியும் ஒன்று என்னும் கொள்கைகள் வலிமைபெற்றுவரும் மேனாட்டு ஆராய்ச்சிகளின் முடிபுகளை வைத்து அந்த ஆதிமொழி தமிழே என்று நூலாசிரியர் இந்நூலில் நிறுவுகின்றார். நமது தாயகம், நம் முன்னோர், குமரி நாடு, நாவலந்தீவு, மொகஞ்சதரோத் தமிழர், எகிப்தியர், சுமேரியர், மேற்கு ஆசியாவில் குடியேறிய வேறு தமிழர் சிலர், ஆரியர், ஆரியர் – தமிழர் போர், தமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும், ஆரியர் வேதங்கள், தமிழ் மறை, பார்ப்பனர், புராணங்கள், தமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள், மலைநாட்டு மக்கள், முல்லைநில மக்கள், வேளாண் மக்கள், கடற்கரை மக்கள், பாலைநில மக்கள், தமிழ், தமிழ்ச் சங்கம், நாடகத் தமிழ், இசைத் தமிழ். இயற்றமிழ், சமயம் உண்டான வகை, கடவுள் கொள்கை, தமிழரின் வீரவாழ்க்கை, வாணிகம், ஓவியமும் சிற்பமும், நெசவுத் தொழில், அணிகலன்கள், உடை, உணவு ஆகிய 35 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84671).