8474 அத்தருணத்தில் பகைவீழ்த்தி.

அகரமுதல்வன். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

104 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-14-7.

எவற்றிற்கும் எவருக்கும் தன்னை ஒப்புக்கொடுக்காத கொள்கைகளைத் தன் எழுத்தின் மூலமாக முன்வைக்க முயலும் அகரமுதல்வனின் கவிதைகள் வித்தியாசமானவை. ஈழத்தின் போர் நிகழ்களம், களப்பலி தொலைத்த நிலம், விரட்டப்படுகின்ற அம்மண்ணின் மக்கள் தம் துயரம், இவற்றையெல்லாம் மீறி மிக அழுத்தமாக மீண்டும் மீண்டும் பகை வீழ்த்தி நிலம் மீட்கத் துடிக்கும் பிடிவாதம் கொண்ட ஒரு உரிமைக்குரலாக இவரது கவிதைகள் ஒலிக்கின்றன. சுந்தரலிங்கம் அகரமுதல்வன், யாழ்ப்பாண மாவட்டத்தின் பளையில் 1992இல் பிறந்தவர். முதலாவது கவிதைத் தொகுப்பாக தொடரும் நினைவுகளை வழங்கியவர். இணையங்களில் கலை இலக்கியம் அரசியல் கட்டுரைகளை வழங்கிவருபவர். அத்தருணத்தில் பகை வீழ்த்தி இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.

ஏனைய பதிவுகள்

17107 அமைதி.

சுவாமி ஜோதிமயானந்தர். கதிர்காமம்: யோகாச்சிரம வெளியீடு, 1வது பதிப்பு, 1968. (அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. ‘ஸ்ரீ சுவாமி ஜோதிமயானந்தர் மிக அடக்கமான சாதகர். அவர்