லினோதினி சண்முகநாதன். பிரான்ஸ்: Linothini Shanmuganathan, 17, Rue de Beziers, 93150 Le Blanc Mesnil, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(86) பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்படப்படவில்லை, அளவு: 15×11.5 சமீ.
உண்மைக் காதலில் இவ்வுலகை மறந்து இரு உயிர்கள் பாடும் சங்கீதமாக இக்கையடக்கக் கவிதைத் தொகுதி வண்ணமயமாக அமைந்துள்ளது. காலங்கள், தூரங்கள், உருவங்கள் கடந்து ஒன்றிற்குள் ஒன்று ஒன்றிவிடுவதும், ஒன்றிற்காய் ஒன்று கரைந்து விடுவதுமான ஆத்மார்த்தமான காதலை, இந்நூல் முழுவதும் பதிவுசெய்திருக்கிறார். பார்வதி என்னும் புனைபெயரில் tamilvishai.com என்ற இணையத்தளத்தில் தொடர்ந்து வெளிவந்த இவரது கவிதைகளின் நூலுருவே இதுவாகும். லினோதினி யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடம் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி பயின்றவர். பிரான்சிற்குப் பலம்பெயர்ந்து, பாரிசில் வாழும் இவர் ஸ்டார் இசைக்குழுவின் பாடகியாகவும், மேடை நிகழ்வு அறிவிப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவரது கணவர் சண்முகநாதன், பாரிஸ், ஸ்டார் இசைக்குழுவின் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.