மை.பன்னீர்செல்வம். இராகலை: மை.பன்னீர் செல்வம், 23, சென். லெனாட்ஸ் பசார், ஹல்கரனோயா, 1வது பதிப்பு, ஜுன் 2002. (இராகலை: ஏ.வீ.எஸ். அச்சகம், இல. 33, ஸ்டாப்போட் வீதி, ஹல்கரனோயா).
44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
சிதைவுக்குள் புதைந்துபோகாமல், மக்களோடு மக்களாகக் கலந்து ஓர் இளைஞன் எவ்வாறு சிந்திக்க வேண்டுமென்பதற்கு சில உதாரணக் கவிதைகளை இத்தொகுப்பில் மை.பன்னீர்ச்செல்வம் வடித்துள்ளார். மனிதாபிமானம், அரசியல், தர்மம், தார்மீகக் கோபம், என்றவாறாக மாறப்பட்ட தொனிப்பொருட்களை பொது உலகத்தின் முன்வைக்க இவரின் கவிதைகள் எடுக்கும் பிரயத்தனம் தோற்கப்போவதில்லை (கவிஞர் சு.முரளிதரன், அணிந்துரையில்).