8490 இன்னும் உன் குரல் கேட்கிறது: கவிதைகள்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, 25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: Apple Creations).

71 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0195-09-1.

ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் ஹப்புத்தளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவர் எச்.எப்.ரிஸ்னா. 2004இல் மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் தன் கன்னிக் கவிதையை காத்திருப்பு என்ற தலைப்பில் எழுதியதன்மூலம் எழுத்துத்துறைக்குள் நுழைந்தவர். 2011இல் ஜனசங்சதய இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம்-இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நடத்திய கவிதைப்போட்டி, மலைநாட்டு எழத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் பரிசுகளை வென்றவர். Best Queen  Foundation என்ற இலக்கிய அமைப்பின் உபதலைவராகவும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இலக்கியப் பணியாற்றுபவர். இத்தொகுப்பில் எச்.எப்.ரிஸ்னாவின்  56 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வசனக் கவிதை- புதுக்கவிதையாகப் பூத்து நிற்கின்றன. இயல்பான விடயங்களையே பாடுபொருளாகக் கொண்டுள்ள இவரது கவிதைகளில் காதல் உணர்வு தூக்கலாகத் தெரிகின்றது. புரவலர் புத்தகப் பூங்காவின் 30ஆவது வெளியீடு இது.

ஏனைய பதிவுகள்