8491 ஈ தனது  பெயரை மறந்து போனது.

றஷ்மி (இயற்பெயர்: அகமத் முஹம்மது றஷ்மி). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-65-7.

நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது றஷ்மியின் கவிதைகள் உள்ளன. அவருடைய இத்தொகுப்பில் உள்ளவை காவியங்கள். காவிய இலக்கியத்திற்கு புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும் சிந்தனையும் கூடும் படைப்புக்கள் இவை.  போர்க் காட்சிகளுக்கும் அழித்தொழிப்பின் நாட்களுக்கும் இடையிலான கைவிடப்பட்ட நிலத்து மாந்தரின் இருப்பை வேறுபட்ட குரலில் பேசும் கவிதைகள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாகக் கவிஞன் நிற்க மறந்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண்நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகின்றன. றஷ்மி  கிழக்கு இலங்கையின் அக்கரைப்பற்றில் பிறந்தவர். புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Бірінші салымшы үшін 1xBet-те премиум жоғарырақ тіркелу: қалай алуға және пайдалануға болады

Мазмұны Тәуекелсіз ставкалар BC 1xBet-тегі сәттілік дөңгелегі 1xbet-те сыйақыны қалай алуға болады – 32 500 рубль? Компанияның пайдаланушылары жоғары коэффициенттермен ставкалар үшін сыйлықтар ала алады.