8492 ஈழப் புற ஆயிரம்: மரபு வழி வசன கவிதைகள்.

க.சிவசுப்பிரமணியன். லண்டன்: க.சிவசுப்பிரமணியம், 7, Victoria Close, Hayes, Middlesex UB3 2PW, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

335 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் இக்கவிஞரின் புறநானூற்று வழியில் அமைந்த புற ஆயிரம் மரபுவழியில் அமைந்த வசன கவிதைகள் ஆயிரத்தை முப்பத்தைந்து பகுதிகளாக வகுத்துத் தருகின்றது. அதனால் புறநானூறு இங்கே புற ஆயிரமாகின்றது. இவை ஈழவிடுதலைப்போராட்டத்தின் போக்கினை கவிதைவரிகளில் வழங்கும் இந்நூலில் போராட்ட நாயகர்களையும் அவர்தம் திறமைகளையும் புகழ்ந்து பாடும் கவிதைகளாகவும் ஆங்காங்கே அமைகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், மற்றும்  முக்கிய உறுப்பினர்களான பால்ராஜ், தமிழ்ச்செல்வன், புலித்தேவன், விக்டர், சொர்ணம், அன்டன் பாலசிங்கம், சசிகரன், கரிகாலன், நடேசன், புதுவை இரத்தினதுரை, இளங்குமரன், தமிழேந்தி, சங்கர், மாலதி, விதுஷா, பாலகுமாரன், பொட்டம்மான், கரும்புலிகள், தமிழக அரசியல்வாதிகளான இந்திராகாந்தி, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெயலலிதா, பழ.நெடுமாறன், வை.கோபால்சாமி, சீமான், மற்றும் பார்வதி அம்மா, அன்னை பூபதி ஆகியோரின்  புகழ்பாடும் கவிதைகளும் இடையிடையே இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்