க.பரணீதரன், நாச்சியாதீவு பர்வின், மன்னார் அமுதன் (தெகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).
vii, 89 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-52496-3-8.
ஜீவநதியின் பதினொராவது வெளியீடாக இக்கவிதை நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில அனுராதபுரம், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அறுபது கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தெணியானின் அணிந்துரை நூலுக்கு அணிசேர்க்கின்றது. இக்கவிதைகளில் சில நம்பிக்கை தருகின்றன. சில இழந்துபோன இழப்புகளை ஞாபகப் படுத்துகின்றன. சில போரின் கொடுமைகளை மீள நினைவுபடுத்துகின்றன. சில கவிதைகள் காதலின் தோல்விகளையும், தியாகங்களையும் பேசுகின்றன. கவிஞர்களின் வாழ்வியல் சூழலுக்கேற்ப கவிதைத் தளங்களில் வேறுபடுவதை அவதானிக்கமுடிகின்றது. தன்னுயிர் நீத்து இழப்பீட்டுத் தொகையில் தாயைக்காக்கும் இராணுவ வீரனையும், திசை மாறும் அரபு உலகின் அவலத்தையும், தோல்விகளின் வேதனையைத்தாங்கி துன்பத்தில் துவண்டபோதிலும் நாளைய எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனப்போக்கையும் இக்கவிதைகளிடையே காணமுடிகின்றது. மன்னார் பிரதேசத்திலிருந்து மன்னார் அமுதன், பி.அமல்ராஜ், மன்னூரான் ஷிஹர், மன்னார் எம். ஷிபான், ராமப்பிரியா கருணைராசா, அமல்ராஜ் ரெவல், மொஷமட் சுஜானா, ஜே.ஆர்.மயூரன், ஹில்லறி பஸ்ரினா, பிரான்சிஸ் பெனில் ஆகியோரும், அனுராதபுரம் பிரதேசத்திலிருந்து கெகிறாவ சஹானா, கெகிறாவ சுலைஹா, நாச்சியாதீவு பர்வின், ஜன்சி கபூர், மிப்ராஸ் இஸ்மாயில், ரிஸ்னா ரஸீன், நிசாம் பாருக், வசீம் அக்ரம், சஹ்ரின் அஹமத், நேகம் பசான் ஆகியோரும் யாழ்ப்பாண பிரதேசத்திலிருந்து இ.இராஜேஸ்கண்ணன், த.ஜெயசீலன், தாட்சாயணி, பெரிய ஐங்கரன், செ.கணேசன், த.அஜந்தகுமார், வெ.துஷ்யந்தன், க.பரணீதரன், வேல் நந்தகுமார், கமல சுதர்சனன் ஆகியோரும் இத்தொகுப்பிற்கான கவிதைகளை எழுதியுள்ளனர்.