நெடுந்தீவு முகிலன். நெடுந்தீவு: வி.முகிலன், 1வது பதிப்பு, மே 2009. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: ஜெயா அச்சகம்).
(2), 82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×14 சமீ.
மனத்திரை மேகங்கள் என்ற கவிதைத் தொகுப்புடன் அறிமுகமாகிய நெடுந்தீவு முகிலனின் மூன்றாவது நூலாக மாதிரி ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பான கிறுக்கி வெளிவந்துள்ளது. கவிதையுடன் ஈழத்துத் தமிழ்க் குறும்படத்துறையிலும் இவரது ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218322).