8540 மல்லியப்பு சந்தி.

திலகர் (இயற்பெயர்: மயில்வாகனம் திலகராஜா). கொழும்பு 11: ம.திலகராஜா, பாக்கியா பதிப்பகம், கெய்சன் இம்ப்ரஸ், இல.5, முதலாவது மாடி, 2வது ரோகிணி ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 13: சக்தி என்டர்பிரைஸஸ், கே.சிரில் சீ பெரேரா மாவத்தை).

xxxi, 128 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1805-00-5.

ஒரு மலையகக் கவிஞரின் கவிதைத் தொகுப்பு. சிறுவயதில் தான் மலையக வாழ்வியலுக்குள் பட்ட துன்பத்தைப் பேசுவதாகவும், தன் இளவயதின் இயலாமையினைத் தாண்டி வாழ்வில் முன்னேறியதையும் பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன. இக்கவிதை நூலில் தன் உள்ளத்து உணர்வுகளை ஒளிவு மறைவின்றி எடுத்துக்கூறும் இவர், மலையகத்து புதிய வாலிபர்கள் எவருக்கும் எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்தியம்புகிறார். மலையகத் தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம், வாழ்வின் அவலங்கள், அவர்களுக்கு எதிரான வன்முறைகள்,  அவர்களின் இடப்பெயர்வு, அரசியல் எனப் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கியதாக இக்கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. இந்நூல் பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின்  நயப்புரையும் பின்னுரையாகத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Susanoo-no-Mikoto Wikipedia

Their identity, know as the ‘One-Leg’, suggests god K of Postclassic and you will Vintage Maya iconography, a good deity away from lightning which have