கிண்ணியா அமீர் அலி. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, 25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 12: ஷபீனா பிரின்ட்ஸ், ELG 11, Dias Place).
ix, 70 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0195-07-7.
வாழ்வியல் கோலங்களைத் தரிசித்துத் தான்பெற்ற சுகானுபவத்தையும் சோகத்தையும் தர்மீகக் கோபத்தையும் இந்தக் கவிதைத் தொகுதிக்குள் இக்கவிஞன் தந்துள்ளான். கிண்ணியா அமீர் அலி கொழும்பு/வடக்கு கலைமகள் தமிழ் வித்தியாலய ஆசிரியராவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதிநேரக் கலைஞனாகவும் பணியாற்றுகின்றார். இந்நூல் புரவலர் புத்தகப் பூங்காவின்28ஆவது நூலாகும்.