8555 அறுவடை: வள்ளுவர் கருத்துக்களை மையமாகக்கொண்ட ஓரங்க நாடகம்.

அமுதன். கொழும்பு 14: வேல் வெளியீட்டகம், 67 கிறான்பாஸ் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1976. (கொழும்பு: ரஞ்சனா அச்சகம்).

46 பக்கம், விலை: ரூபா 2.75, அளவு: 18.5×12.5 சமீ.

இது முதலாவது வேல் வெளியீடாக வெளிவந்துள்ள நூல். பூமியில் இருந்து சிலரை இயமலோகத்திற்கு இழுத்து வந்து தமது வினைப்பயனை அறுவடைசெய்ய வைத்திருக்கிறார் நூலாசிரியர். சமுதாயத்தில் நிலவும் போலிக் கொள்கைகள், ஆசாடபூதித் தனங்கள், போன்றவற்றை மிகவும் நுணுக்கமாகக் கண்டிக்கிறார். சமூக விரோதிகளின் பிரதிநிதிகளாக இந்நாடகத்தில் ஆடலழகி கயற்கண்ணி, வஞ்சம் நிறைந்த வைத்திய நிபுணர் வைத்தியலிங்கம், ஆசாடபூதி ஆசிரியர் இராமசாமி, மனிதப் புல்லுருவியான வியாபாரி இராசநாயகம் என்று சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரைத் தேர்ந்து இவர் நரகத்துக்கு அனுப்பிவைத்து அவர்கள் மண்ணுலகில் செய்த கொடுமைகளின் பலனை நரகலோகத்தில் அறுவடை செய்யவைத்திருக்கிறார். திருவள்ளுவரின் கருத்துக்களைத் தனது நாடகத்திற்கு பின்புலமாக்கியிருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்