முத்து இராதாகிருஷ்ணன் (இயற்பெயர்; முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்). வவுனியா: அரங்க செயற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, மார்கழி, 1998. (வவுனியா: நவயோகா அச்சகம்).
xii, (7), 92 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன ஓவியராக, நாடகவியலாளராக, சிறுகதை எழுத்தாளராகப் பல்வேறு தளங்களில் அறியப்பட்டவர் முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன். இலங்கை கல்வி நிர்வாகச் சேவையில் இணைந்து திருக்கோணமலையில், வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். இந்நூலில் அவரது படைப்புக்களான பள்ளியெழுச்சி, மானிடச் சிக்கல், நீளும் பாலை, முகமற்ற மனிதர், நேசத்தால் நிறைந்த நெஞ்சள் ஆகிய ஐந்து நாடக எழுத்துரக்களும், பின்னிணைப்பில் “மானிடச் சிக்கல்: அரங்க எழுத்துருக்கள்” பற்றிய கந்தையா ஸ்ரீகணேசனின் விமர்சனக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. இந்த நாடக இலக்கிய நூலுக்கு 1998ம் ஆண்டுக்குரிய தேசிய சாகித்திய விருதும் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருதும் கிடைத்துள்ளன. நூலில் முதற்பதிப்பு 1998 எனக்குறிப்பிட்டாலும், உள்ளடக்கத்தில்; 2007இல் வெளியிடப்பட்ட துயரப்பாறை நூல் பற்றிய தகவல் காணப்படுகின்றதால், இந்நூல் 2007க்குப் பின்னைய மீள்பதிப்பாகக் கருத இடமுண்டு. இதுபற்றிய தகவல் எதுவும் நூலில் பதிப்புரையில் குறிப்பிடப்படவில்லை.