அ.முத்துலிங்கம். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 2வது பதிப்பு, நவம்பர் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்).
173 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89945-99-2.
உலகெங்கும் பொதுவாகவும் மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இந்நூல். ஒரு சராசரி தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் இக்கதைகள் வாழ்வின் வியப்பும் விரக்தியும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகும் அபத்தமும் நிறைந்த தருணங்களைச் சுவையாகப் பதிவுசெய்கின்றன. இத்தொகுப்பில் தாழ்ப்பாள்களின் அவசியம், பத்து நாட்கள், புவியீர்ப்புக் கட்டணம், லூசியா, பொற்கொடியும் பார்ப்பாள், வேட்டை நாய், உடனே திரும்பவேண்டும், 49ஆவது அகலக்கோடு, புகைக்கண்ணர்களின் தேசம், வெள்ளிக்கரண்டி, சுவருடன் பேசும் மனிதர், பத்தாவது கட்டளை, மன்மதன், மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள், மயான பராமரிப்பாளர், அமெரிக்கக்காரி ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் அண்மைக்காலங்களில் எழுதிய 16 கதைகள் அடங்கியுள்ளன. அ.முத்துலிங்கம் இலங்கையின் வடபுலத்தில் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின்னர் இலங்கையின் பட்டயக் கணக்காளர் படிப்பையும் இங்கிலாந்தில் Chartered Management Accountancy படிப்பையும் பூர்த்தி செய்தபின்னர் இலங்கையிலும் ஆபிரிக்காவிலும் கணக்காளராகப் பணியாற்றியவர். பின்னர் ஐ.நா.வுக்காக பல நாடுகளில் இத்துறையில் பணிபுரிந்து 2000இல் ஓய்வு பெற்று, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வாழ்கிறார். 60களிலிருந்து எழுதிவரும் முத்துலிங்கம் தாயகத்தில் மட்டுமல்லாது புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட ஒரு ஈழத்துப் படைப்பாளி.