8569 அனுசுயாவின் கரடி பொம்மை.

சந்திரகாந்தா முருகானந்தன். கொழும்பு 6: சந்திரகாந்தா முருகானந்தன், 81 மெனிங் பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

x, 154 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 17.5×12 சமீ.

பெண்ணியம் சார்ந்த பத்தி எழுத்துக்களையும், கட்டுரைகளையும் தந்துவந்த ஆசிரியரின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. கதைகள் பெரும்பாலும் குடும்பச் சிக்கல்களைக் கருவாகக் கொண்டவை. பெண்ணிய மேம்பாட்டினை நோக்காகவும் கொண்டவை. போர்க்காலத்தில் வன்னி மண்ணில் வாழ்ந்த அனுபவங்கள் தான் பிறந்த தேசமான வடமராட்சியில் கிடைத்த அனுபவங்கள், பெண்ணிய செயற்பாடுகள் மூலம் கிடைத்த அனுபவங்கள் என்பன கதைகளுக்கான பின்புலமாகின்றன. இத்தொகுப்பில் சந்திரகாந்தாவின் 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவை அனுசுயாவின் கரடி பொம்மை/ எல்லாம் துன்ப மயம்/தவளைப் பாய்ச்சல்/ கோபர தீபம்/ குடை/ புதிய உறவுகள்/ புத்தெழுச்சி/ தூறல் நின்னு போச்சு/ மனதைத் தொலைத்துவிட்டு/ இத்தனை நாளாய் எங்கிருந்தாள்/ இழப்பும் அழைப்பும்ஃ யாரிடம் நோவேன்/ சாதித் தீ/ மனித நேயம்/ எதிர்கொள்ளல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

National Casino

Content Schritt 2: Bedingungen – Online -Slot -Spiele gold rush Verantwortungsvolles Spiel Shambala Casino: 180 Freispiele No Deposit Poker Bonus Holen: Einfacher Als Gedacht Die