8592 கடவுளின் மரணம்.

கருணை ரவி. சென்னை 600024: வடலி வெளியீடு, B 2/5, அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

112 பக்கம், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் கருணை ரவியின் 16 சிறுகதைகள் இடம்பெறுகின்றன. கடவுளின் மரணம், பிரிகை, கப்பல் எப்ப வரும், முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும், புஷ்பனுக்கு இரண்டு பொடிகாட், சாவலி, நாய்வெளி, சிங்களத்தி, காணாமல் போனவர்கள், செம்படைச்சி, கிரகணவீடு, பழி, சித்தி வந்தாள், உயிர் நிழல், முறிவுகள், காலமுகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் யுத்தத்தை மட்டுமே கடந்த முப்பது ஆண்டு வாழ்க்கையாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் இலக்கியக் குரல்களாக எழுகின்றன. வாழப்படாத வாழ்க்கை பற்றிய, வாழ்வுடன் மரணமாடிய குரூர விளையாட்டுப் பற்றிய, கைவிட்டுப்போன கனவுகள் பற்றிய நினைவுகளே இக்கதைகள். குருதியினாலும் கண்ணீரினாலும் ஊறியிருக்கும் தனது கடந்த காலத்தின் பாதையில் இந்தக் கதைகளின் வழியாக ஆசிரியர் நம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றார்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Gratis Spielen 2024

Content Genau so wie Hochdruckgebiet Ist Ein Maximale Triumph In Book Of Ra? Faqs Nach Book Of Ra Kostenfrei Keine Registrierung Ferner Anmeldung Besondere Spielsymbole