தேவமுகுந்தன். (இயற்பெயர்: தேவராசா முகுந்தன்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்).
103 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-05-2.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் 1972இல் பிறந்தவர் தேவராசா முகுந்தன். தேவமுகுந்தன், நிர்மலன் ஆகிய புனைபெயர்களில் எழுதிவருபவர். கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம், புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப இடைநிலைக் கல்வியைப்பெற்று, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்திலும் இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா, முதுமாணி என்பவற்றைப் பூர்த்திசெய்தபின்னர் இலங்கை தேசியக் கல்வி நிறுவகத்தின் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் 90களில் எழுதத் தொடங்கிய இவரது பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன. கண்ணீரினூடே தெரியும் வீதி, வழிகாட்டிகள், இடைவெளி, சிவா, இரட்டைக் கோபுரம், சின்ன மாமா, ஒரு சுதந்திர நாள், இவன், கூட்டத்தில் ஒருவன், மரநாய்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கதைகளுக்கான விரிவான விமர்சனமொன்றை பின்னுரையாக பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதியிருக்கிறார்.