மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).
126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர். இந்நூலில் தாயகத்துச் சிறுகதைகளாக-இவர் இலங்கையில் இருந்தவேளையில் 1964-1990 காலகட்டத்தில் எழுதிய தாலி, முதல் பஸ், மானுடன் ஆகிய சிறுகதைகளுடன், புலம்பெயர்ந்தபின்னர் எழுதிய புகலிடத்துச் சிறுகதைகளான அரவணைப்பு, கண் திறந்திட வேண்டும், விவாகரத்து, வரம்பு உடைதல், தாய்மை, ஈர்ப்பு, தொப்புள் கொடி ஆகிய கதைகளும் இடம்பெற்றுள்ளன. கதைகள் ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.