கே.வி.குணசேகரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: Script Offset).
x, 378 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 17.5×12 சமீ.
ஆசிரியர், கல்வியாளர், என்ற ஆளுமைக்கு அப்பால் படைப்பிலக்கியத்துறையிலும் தன் தடம்பதித்துவரும் நூலாசிரியர் கே.வி.குணசேகரம் கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றுகிறார். தமிழர்களின் வாழ்வியல் நூலாகிய திருக்குறளில் உள்ள 1330 குறள் பாக்களுக்கும் பொருத்தமான விளக்கமளிக்கும் வகையில் சிறுகதைகளை எழுதவேண்டும் என்ற முனைப்பில் உருவான மற்றொரு தொகுதி இதுவாகும். ஏற்கெனவே 210 குறள்களுக்கான கதைகளை முன்னர் எழுதிமுடித்துள்ள இவர் இத்தொகுதியிலும் அறத்துப்பாலில் உள்ள மேலும் 80 குறள்களுக்குப் பொருத்தமான கதைகளை வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதையின் கீழும் அதற்கான குறளும் அதன் கருத்துரையும் தரப்பட்டுள்ளது.