நெலோமி அன்ரனிகுரூஸ். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 5: RST Enterprises Ltd, C/3/4 Anderson Flats).
xii, 104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×12.5 சமீ., ISBN: 978-955-99420-2-3.
வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரான திருமதி நெலோமி அன்ரனிகுரூஸ் எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். நிறங்களில்லா நிஜங்கள், நாய் வால், காகிதப் பூக்கள், பூமாலைகள் புனிதமடைகின்றன, அஸ்தமனத்தில், பாதையொரத்து பண்பாடுகள், பனித்துளிக் கனவுகள், மழைக்காலக் கோலங்கள், நிமிர்ச்சி, பல்லுக் கொழுக்கட்டை ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. தியாக பொம்மைகள் என்ற முன்னைய சிறுகதைத் தொகுப்பு நூலின் மூலம் சிறுகதை இலக்கிய உலகில் அறியப்பட்டவர் நெலோமி. கவிஞர் நாவண்ணனின் புதல்வியான இவர் கவித்துவம்மிக்க ஆத்மாவின் ராகங்கள் என்ற கவிதைத் தொகுப்பினையும் முன்னர் எழுதி வெளியிட்டுள்ளார்.