சயந்தன். சென்னை 600051: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600014: பாவை பிரிண்டர்ஸ்).
128 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-8764-147-6.
சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்துப் படைப்பாளி சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டிருந்த சில கதைகளின் தொகுதி இது. இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இன்னும் பிறந்த மண்ணின் நினைவுகளே மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் தருணத்திலும், புலம்பெயர் வாழ்வின் முரண்களையும், பாடுகளையும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சில துண்டுகளாக இத்தொகுதியில் பேசியிருக்கிறார். மோட்டார் சைக்கிள் குரூப், தமிழ் டைகர்ஸ் பிரீடம் பைட்டர்ஸ், மஞ்சள் கறுப்புக் கயிறுகளின் கதை, பெயரற்றது, இந்தியாக்காரன், சின்ராசு மாமா, சாம்பலில் சிறகு பொசுங்கிய சிறு பறவை, 90 சுவிஸ் பிராங்குகள் ஆகிய எட்டு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.