8633 மனைவி மகாத்மியம்.

சுதாராஜ். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, இல. 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு: கௌரி அச்சகம்).

(6), 250 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-8637-25-8.

யாரொடு நோவோம், மனக்கணிதம், நேயம், இளமையின் இரகசியம், ஒரு பிடி சோறு, ஆவிகளுடன் சகவாசம், பாம்பு, இன்னொரு ரகசியம், ஆண்களும் பூதமும்,  மாடு, வராமற் போனதும் வராமற் போனவர்களும், மனைவி மகாத்மியம் ஆகிய பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பு இது. மனித உணர்வுகளின் மறை பக்கங்களைஆர்ப்பாட்டமில்லாத தனது எழுத்துக்களின் வழியாகச் சித்திரித்துக்காட்டுபவர்  சுதாராஜ். எழுபதுகளின் ஆரம்பத்தில் ஈழத்து எழுத்துலகில் தடம்பதித்த இப்பன்னூலாசிரியர், பொறியியலாளராகப்  பல்வேறு நாடுகளிலும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  220153).

ஏனைய பதிவுகள்