நா.கணேசன். (இயற்பெயர்: நா.கணேசபிள்ளை). கனடா: நா.கணேசபிள்ளை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ்).
xi, 119 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
25 தலைப்புகளிலானதொரு சிறுகதைத் தொகுதியாக அமைந்தபோதிலும், வாழ்த்துரை வழங்கிய மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி இதனை ஒரு நெடுங்கதையாகப் பார்க்கிறார். ஆசிரியர் தான் மனதில் வரைந்த பொதுமைப்பாடெய்தியவொரு தமிழ்க் கிராமமான பனந்தோப்பு என்ற ஊத்தோப்பிய கிராமத்தையும் (1516இல் சேர். தோமஸ் மூர் எழுதிய நெடும் கதை-ஊத்தோப்பியா. ஒருவழியை என்ற அத்லாந்திக் சமுத்திரத்தில் அமைந்திருந்த கற்பனைத்தீவு பற்றிய இந்நெடுங்கதையின் பின்னர் இச்சொல் வழக்கில் வந்துள்ளது) அதன் மக்களையும் சுற்றி ஒவ்வொரு கதைகளையும் கொண்டுசெல்கிறார். கதைகளின் அடி நாதமாக கிராமிய மறுமலர்ச்சி நவீன உத்திகளுடன் கூடியதாக நோக்கப்படுகின்றது. உதாரணமாக சூரியத்தட்டுக்கள், காற்றாலை போன்றவற்றின் அறிமுகத்தை வலியுறுத்துகின்றார். கதாசிரியர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். தனது விஞ்ஞானச் சிந்தனைகளையும் கதைகளில் விபரிக்கமுயன்றுள்ளார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? வாசிப்பு விரிவாக்கத்திற்கு ஒரு வாசிகசாலை, காசுக்காகவா கனடா மாப்பிள்ளை, கணினியுகத்தில் ஒரு கணினி அன்பளிப்பு, மரங்களை நடுவோம் மண்ணைப் பாதுகாப்போம் என்பதாக இவரது 25 கதைகளினதும் தலைப்புகள் அமைகின்றன.