8650 இருள் இனி விலகும்.

தமிழ்க்கவி. (இயற்பெயர்: திருமதி தமயந்தி சிவசுந்தரலிங்கம்). கிளிநொச்சி: அறிவு அமுது பதிப்பகம், யாழ். நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 138 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21.5×14 சமீ.

இனிவானம் வெளிச்சிடும் என்ற நாவலைத் தந்த தமிழ்க்கவியின் மற்றுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்த நாவல் இது. வன்னியின் சின்னப்புதுக்குளம் என்ற கிராமத்தில் 19.7.1947இல் பிறந்த தமிழ்க்கவி ஒரு விடுதலைப் போராளி. இவருடைய இரு பிள்ளைகளும் போராளிகளானவர்கள். தன்னுடன் ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் பயணித்து, மாவீரர்களாகவும், கரும்புலிகளாகவும் மாறித்தன்னுயிரைத் தியாகம் செய்தவர்களையே இந்நாவலின் கதாபாத்திரங்களாக உலவவிட்டுள்ளார்.  கற்பனைக் கதையல்லாத வரலாற்றுப் பதிவாக இந்நாவலை நகர்த்திச் செல்கின்றார். தான் போராளியாக இல்லாத காலத்தில் ஜெனிற்றாவாக அறிமுகமாகிப் பின் போராட்டத்தில் இணைந்து தணிகைச் செல்வியாக மாறிக் களம் பல கண்ட வீராங்கனை தணிகைச் செல்வி இந்நாவலின் பிரதான பாத்திரமாகிறாள்.

ஏனைய பதிவுகள்

15749 லவ் இன் த ரைம் ஒஃப் கொரொனாவும் சில கதைகளும்.

தேவகாந்தன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 118 பக்கம், விலை: ரூபா