8659 ஏவி விடப்பட்ட கொலையாளி.

திசேரா. (இயற்பெயர்: எஸ்.தியாகசேகரன்). கொழும்பு: சிறகுநுனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு: பேஜ் அன்ட் இமேஜ்).

76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 16.5×10 சமீ., ISBN: 978-955-0054-01-5.

90களில் இலங்கைத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் உருவாகி பெரும்பாலும் பரிசோதனையாக முயற்சித்து வரும் திசேராவின் எழுத்தில் உருவாகிய நாவல் அமைப்புக்கு நெருக்கமான வித்தியாசமான பரிசோதனைப் படைப்பு இது. பொதுவாக இலக்கியத்தின் வடிவமாதிரியில் அக்கறையற்ற திசெராவின் கபாலபதி, வெள்ளைத்தோல் வீரர்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து இந்நூல் வெளியாகியுள்ளது. விநோதங்களைக் கலையாக்கும் அவரது விஞ்ஞான சாயல் படிந்த எழுத்துப்பாணி 2004இல் இலங்கையைத் தாக்கிய சுநாமியுடன் தொடர்பான கதைகளை முன்மாதிரிகளற்ற விதத்தில் இந்நாவலில் (?) எடுத்தாள்கின்றது. பாம்பு மாநாடு, இழுபட்ட புகைப்படம், சந்தனக்காடு, கடல் அலை, பரதேசி வந்தது, கசப்பு ஞாயிறு,  கடலின் வல்லபம், பிணங்களின் வருகை, மினியின் கதை, கதைகள் எழுதல், குழந்தைகள் பறிக்கப்பட்ட கதை, வல்லுறவு, இராகவன் கதை, கொள்ளையிடப்பட்ட கிராமங்கள், தகப்பனால் தாய் போன கதை, விரல்களும் காதுகளும், உங்கள் கதை, கடலைச் சபித்தல், நுரைக்கடிதம், முதலை மாநாடு ஆகிய இருபது தலைப்புகளில் இது எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்