செ.கணேசலிங்கன். சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, (12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வட பழநி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வட பழநி).
168 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12.5 சமீ.
மாலை நேரம் கடைக்குச் சென்ற சுந்தரத்தைக் காணவில்லை. தாயார் தங்கம்மா, அக்கா மல்லிகா உட்பட வீட்டில் யாவரும் பதட்டம் அடைகின்றனர். பொலிஸ் நிலையம், இராணுவ முகாம் சென்று முறையிடுகின்றனர். பல்கலைக்கழகத்தில் கற்கும் மூத்த மகன் மகாலிங்கம் தாயாரை மனித உரிமைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று முறையிடுகின்றான். காணாமல் போனவர் பட்டியலில் 356ஆவது நபராக சுந்தரம் பதியப்படுகின்றான். இத்தேடுதல் வேட்டை மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், சவக்கிடங்குகள் வரை விரிகின்றது. சட்டங்கள் ஒழுங்குகள் நீதிகள் மனித உரிமைகள் ஒழிந்துவிட்டனவா என்ற வினாவுக்கு மருத்துவனைச் சவக்கிடங்குக் காவலன் கதிரவன் “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்ற பாரதி பாடலைக் கூறுகின்றான். நீண்ட கால உலக யுத்தங்களின் தொடர்ச்சியில் மனித நாகரிகத்தின் நிலையும் இந்நாவலின் அடிப்படையாக அமைகின்றது.