எம்.குருபாவா சுவாமி. யாழ்ப்பாணம்: எம்.குரபாவா சுவாமி, 1வது பதிப்பு, 1957.(யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).
296 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலத்தில் எழுதப்பட்ட நாவல் இது. “உலகில் பற்பல கொள்கைகள் நிலவுவதால் சமய சமரச உணர்ச்சி, ஆண்டவனின் பிள்ளைகளாகிய எங்களிடத்து அருகி வருகிறது. இவற்றைக் கண்டு சகிக்கொணாத் துயருறும் மனோநிலையில் மாயை வீரம் உண்மை முடிவு என்னும் கதைத் தொகுதியினை எழுதத் தூண்டப்பெற்றேன். “என்று இவரது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தற்சிறப்புப் பாயிரத்தில் “அருமறைப் பொருளான அல்லாஹூத் தாலாவின் அருளன்பு நெஞ்சில் வருமே “ என்று பாடுவதிலிருந்து இவர் ஒரு இஸ்லாமியர் என்றுணர முடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98750).