8779 எல்லோரும் தலைவர்கள்: ஆசிரியர் சேவை அனுபவக் கதைகள் இருபது.

தெனகம சிரிவர்த்தன (சிங்கள மூலம்), மொஹமட் ராசூக் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்த, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சதுர பிரின்டர்ஸ், இல. 69, குமாரதாச பிளேஸ்).

112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14சமீ., ISBN: 978-955-30-3509-7.

சிங்கள இலக்கியத்தில் பிரபல்யமாகப் பேசப்படுபவர் தெனகம சிரிவர்த்தனா. நீண்டகாலம் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றியவர். சிங்கள-தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த எழுத்தாளர் பாராட்டுத் திட்டத்தின்கீழ் இவரது நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. இவரது பாடசாலை வாழ்வியல் அனுபவத்தில் முகிழ்ந்த 20 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிரிநாத என்ற பாத்திரமே பெரும்பாலான கதைகளில் இவரத அனுபவங்களின் கதாபாத்திரமாகின்றது. கதைகள் பெரும்பாலும், பாடசாலை வாழ்வில் ஆசிரியர்-அதிபர் முரண்பாடு, சிறுவர் -ஆசிரியர் உறவு, ஆசிரியர்களுக்கிடையிலான தொடர்பாடல், பாடசாலலையில் நுழையும் அரசியல் ஏற்றத்தாழ்வு என்பனபோன்ற கருக்களைக் கொண்டவையாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe

Content É Confiado Acocorar-se Que Slot?: Online Parimatch Blackjack 5 Inscreva -se bônus Cassinos Onde Você Pode Aparelhar Wild Rubies Antes Criancice Jogar Uma vez

17915 இலக்கியத் தென்றல்: கோவிலூர் செல்வராஜன் பொன்விழா சிறப்பு மலர்-2023.

கோவிலூர் செல்வராஜன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  174 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ.