நகிப் மஹ்ஃபூஸ் (யேபரiடி ஆயாகழரண) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-89748-95-1.
பண்டைய கீருடைய நாகரீகத்துடன் இஸ்லாமிய கலாச்சாரத்தை முழுமையாக உள்வாங்கியுள்ள எஹிப்தின் தலைநகர் கெய்ரோவில் கடந்த நூற்றாண்டில் பிறந்தவர் நகிப் மஹ்ஃபூஸ். சிவில் சேவை அதிகாரியாகப் பணியாற்றிய போதிலும், 17ஆவது வயதிலேயே படைப்பிலக்கியத்துறையினால் உள்வாங்கப்பட்டவர். பண்டைய இதிகாசக் கதைகளைச் சமகால எகிப்திய அரசியல்-கலாசார விமர்சனங்களிலே புதிய படிமங்களை ஏற்படுத்தும் வகையில் இணைப்பதில் இவர் வெற்றிகண்டவர். இலக்கியத்துக்கான நொபல் பரிசை வென்ற முதலாவது அரபுமொழிப் படைப்பாளி இவராவார். 30க்கும் அதிகமான நாவல்களை வழங்கியவர். அவற்றில் ஒன்றான மிரமார்- அரபு மொழியின்மரபுவழிவந்த ஓர் இலக்கிய வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. மத்திய கிழக்கின் தலைசிறந்த படைப்பாளியான இவர் சுவாரஸ்யமானதொரு கதையைச் சொல்லும் அதே வேளையில் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளிலே நிலவிய எகிப்திய வாழ்க்கைமுறைகளைப் பற்றிய சமூக வரலாற்று நிகழ்வுகளையும் பதிவுக்குள்ளாக்குகிறார். தடம்பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் தொடரில் வெளிவரும் மூன்றாவது நூல் இதுவாகும்.