பிரமிள் (மூலம்), கால. சுப்பிரமணியம் (தொகுப்பாசிரியர்). சென்னை 600033: விருட்சம், 6/5 போஸ்டல் காலனி, முதல் தெரு, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
பிரமிளின் மறைவுக்குப் பின் அவரது அனைத்து எழுத்துக்களையும் புத்தக வடிவமாகக் கொண்டுவரும் திட்டத்தில் தற்போது அவரது மொழிபெயர்ப்புக் கதைகளும் கட்டுரைகளும் சிறு பகுதிகளுமாக அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் முன்வைக்கப்படுகின்றது. மொழிபெயர்ப்பச் சிறுகதைகளில் வட்டச் சிதைவுகள் (போர்ஹே), போர்ஹேயும் நானும் (போர்ஹே), கதீட்ரல் (ரேமாண்ட் கார்வர்), பிரதி மானுடர் (விஞ்ஞானக் கற்பிதம்) ஆகியனவும், சின்னஞ்சிறு கதைகளாக போலி (எரிக் ஆம்ப்லர்), கொசுறு (குர்ஜியேஃப்), அறை (சீனக்கதை), அழகு (இலங்கைக் கதை) ஆகியனவும், சிறு கட்டுரைகளாக நம் தலைமுறைக்கு (அல்பர் காம்யூ), தேடல் (விளாடீமர் நபக்கொவ்), கலைஞனும் புனிதனும் (மார்ட்டின் எஸ்லின்), கலைஞனும் பிரசாரவாதியும் (லூயி மெக்கீஸ்), ஆகிய ஆறு சிறு கட்டுரைகளும், விரிவான கட்டுரைகளாக, பௌத்தமும் இந்து இயக்கமும் இரண்டு பார்வைகள் (பிற்ட்ரவேர்ஸ்/பிரமிள்), கம்யூனிசத்தின் வீழ்ச்சி (மிலேவன் ஜிலோஸ்), விடுதலையும் கலாச்சாரமும் (அமில்கார் கப்ரால்), விடுதலையும் வன்செயலும் (பிரான்ஸ் பனன்), விடுதலையும் இராணுவமும் கட்டுப்பாடும் (சமோரா மாஷேல்), குழந்தைத் திறன்கள் (டாம் போவர்), இந்தியக் கொத்தடிமைச் சிறுவர்கள் (தொகுப்பு), குடும்ப பட்ஜெட் (ஹர்ஷன் கர்மேலி) ஆகிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.