ஞா.பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
x, 118 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8354-45-2.
2011ம் ஆண்டு ஆசிரியர் மேற்கொண்ட கம்போடியப் பயணத்தை ஒன்பது சுவைமிகு அத்தியாயங்களில் விளக்கப்படங்கள், புகைப்படங்களின் உதவியுடன் ஒன்பது அத்தியாயங்களில் எழுதியுள்ளார். மரபுரீதியான கட்டுரைப் பாங்கைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் கடற்குதிரை, மீன், பாம்பு போன்ற ஜீவராசிகளுடன் வரலாற்றுப் பாத்திரங்களையும், சமகால சிவாஜி கணேசன் போன்றோரையும் உள்ளிட்ட பல கற்பனைப் பாத்திரங்களை தன் கதையில் உலவவிட்டுள்ளார். அவர்களுக்கூடாகவும் தனது செய்தியை சுவைகுன்றாது தெரிவிக்கமுனைகின்றார். இத்தொடர் ஞானம் இதழில் 2011 டிசம்பர் முதல் 2012 ஓகஸ்வரை பிரசுரமானது. இந்நூலாசிரியர் – ஞானம் சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியர் திரு.தி.ஞானசேகரனின் மகனாவார். இவரது முதலாவது நூல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.